My happiness

Female voice love romantic emotional feeling my heart touching

July 30th, 2024suno

Lyrics

கவிப்பேரரசு பாரதியாரின் ரசிகியாக இருந்தவள் நான் ஆனால் ஏனோ இன்று தெரியவில்லை உன் ரசிகையாக ஆனேன் என்னையும் உன் ரசிகையாக மாற்றிய உன் இரு விழிகளுக்கு என்ன அவ்வளவு கர்வம் என்னையும் காதல் வசப்பட செய்து விட்டதில் பரந்த வானில் பறவை போல சுற்றி வந்த என்னை இன்று உன் இதயம் சிறை செய்துவிட்டது சிறைக் கைதியாக ஆன பின்பும் சிக்கித் தவிக்கிறேன் உன் இதயத்தில் இருந்து மீள்வதற்காக  அல்ல உன் இதயம் எனும் கருவறையில் நம் காதல் எனும் பிணைப்பால் ஒன்றிணைந்திட என்னையும் அறியாமல் உன்னை காதலிக்க தொடங்கினேன் ஆனால் உன்னை காதலிக்க தொடங்கிய பின்பு தான் என்னைப் பற்றி தெரிந்து கொண்டேன் உன் சிறு பிரிவு கூட என்னை வாட்டி வதைக்கிறது சிறிது நேரம் நீ என்னை பிரிந்தால் தாயை தேடும் குழந்தை போல் ஏங்கித் தவிக்கிறது என் இதயம் என்று  உன்னை வந்து சேருவேன் என்று தெரியவில்லை இருப்பினும் காதலோடு காத்திருக்கிறது என் இதயம் காதலில்  காத்திருப்பதும் ஒரு சுகம்தான் என் காத்திருப்பு அனைத்தும் உன் காதலுக்காக  மட்டும் என்பதில் தான் எனக்கு பேர் இன்பம் நிலையில்லா இவ்வுலகில் நீ மட்டும் எனக்கு நிரந்தரம் என்று எண்ணத் தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரை நொடிக்கு ஒரு முறை உன்னை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் நீ எனக்கானவள் என்பதில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லை எந்த ஒரு தயக்கமும் இல்லை ஆனாலும் நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உன் இதயம் எனும் பிருந்தாவனத்தில் என்னை அனுமதிப்பாயா இல்லை நிராகரிப்பாயா நிராகரிப்பதாக இருந்தால் கூறிவிடு நிரந்தரமாக உன்னை விட்டு நீங்கி செல்கிறேன் அனுமதிப்பாய் என்றால் சொல்லிவிடு உன் காதலெனும் மாபெரும் பிருந்தாவனத்தில் வசித்திட ஆவலாக காதலோடு காத்திருக்கிறேன் சொல்லாத காதல் தான் இருப்பினும் உன் மீது சொல்லில் அடங்காத காதலும் கூட உனக்காக  காத்திருக்கும் என் காதலை  ஏற்பது மறுப்பதும் உன் விருப்பம் உன் விருப்பத்தையும் மதிப்பதே என் விருப்பம் நிரந்தரமாகுமா நம் உறவு என்று தினந்தோறும் நினைத்து வாடி தவித்துக் கொண்டிருக்கும் ஒரு உறவு

Recommended

Neon Pulse
Neon Pulse

female vocalist,electronic,dance-pop,dance,electropop,electronic dance music,energetic,rhythmic,house,party,melodic,electro house,uplifting,disco,warm,playful,hedonistic,boastful,synthesizer

Hip-hop king
Hip-hop king

Elektronic, hip-hop, guitar, electric guitar, bass

Intro
Intro

rap, hip hop, sampled, beat

No Me Gustan Las Croquetas Secas
No Me Gustan Las Croquetas Secas

hardcore agresivo potente

Love my Synthesizer
Love my Synthesizer

orchestral, emotional

သိပ်လှပတဲ့ည (A Beautiful Night)
သိပ်လှပတဲ့ည (A Beautiful Night)

energetic female vocals, 2000s eurodance, synth-driven, pulsating bassline, eurodance, pop

Song of Myself. 4. WALT WHITMAN
Song of Myself. 4. WALT WHITMAN

rap orquestal y sinfónico

A Good Day
A Good Day

acoustic folk with female vocals

Canción para José Carnevale
Canción para José Carnevale

Argentinew rock. Melodic male voice. Emotional. Overcominge.

Mi Luz Para Mamá (J.F)
Mi Luz Para Mamá (J.F)

romantic, guitar, pop

Venturing forth
Venturing forth

electronic vocals, 2020's, futuristic beats, digital effects,

intro-p
intro-p

house EDM, piano

Oh My Homeland
Oh My Homeland

pentatonic scale, bongos, mandolin, and bass guitar,